கோவையில் ஸ்மார்ட் சிட்டி வேலை எல்லாம் எப்படி நடக்குது..?

published 1 year ago

கோவையில் ஸ்மார்ட் சிட்டி வேலை எல்லாம் எப்படி நடக்குது..?

கோவை : கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மத்திய ஊடக குழு நேரடியாக ஆய்வு செய்கிறது. இப்பணிகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய ஊடகக் குழு அவற்றை நாடு முழுவதும் பரப்ப உள்ளது. 

அதன்படி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மத்திய ஊடக குழுவுக்கு விளங்கினர். 

இதில் ஸ்மார்ட் சிட்டி குளங்கள் குறித்தும்  அக்குளங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் குளக்கரைகளில் செய்யப்பட்டுள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது. மேலும் தேசிய ஊடக குழுவினரின் சந்தேகங்களும் விளக்கமளிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள்  கோவையில் சீர்மிகு திட்டத்தின் கீழ் முடிக்கப்படவுள்ள பணிகள்,  இவை எல்லாம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்குழுவினர் கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரடியாகப் பார்வையிட உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe