வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

published 1 year ago

வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

கோவை: வரலாற்றில் இன்றைய (ஆகஸ்ட் 5) நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

135 : ரோம் ராணுவம் பீட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது.

910 : டென்மார்க் ராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்ட் மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது.

1100 : இங்கிலாந்தின் மன்னராக முதலாம் ஹென்றி முடிசூடினார்.

1689 : 1,500 ஐரோக்வோயிஸ் இனத்தவர்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர். 
250 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1775 : கையெழுத்து மோசடி செய்ததாக பிரிட்டிஷாரால் குற்றம் சாட்டப்பட்ட மகாராஜா நந்தகுமார் கல்கத்தாவில் தூக்கிலிடப்பட்டார்.

1806 : பிரிட்டிஷ் இலங்கையில் முகமதியர்களுக்கான திருமண சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816 : பிரான்சிஸ் ரொனால்ட்ஸ் கண்டுபிடித்த முதலாவது இயங்கக் கூடிய மின்சாரத் தந்தியை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்தது.
பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824 : சமோஸ் நகரில் இடம்பெற்ற போரில் கிரேக்கக் கடற்படையினர் உஸ்மானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860 : ஸ்வீடன் மன்னர் பதினைந்தாம் சார்லஸ் நார்வே மன்னராக முடிசூடினார்.

1861 : அமெரிக்கத் தரைப்படையில் சவுக்கடி தண்டனை இல்லாது 
ஒழிக்கப்பட்டது.

அமெரிக்க உள்நாட்டுப் போர் :- போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் விதமாக அமெரிக்கக் கூட்டரசு முதன்முறையாக 3 சதவீதம் வருமான வரி விதித்தது.
1872 ல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874 : ஜப்பான் அஞ்சல் சேமிப்பு திட்டத்தை ஆரம்பித்தது.

1884 : விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோஸ் தீவில் நாட்டப்பட்டது.

1914 : முதலாம் உலகப் போர் :- ஜெர்மனியின் கோனிகின் லூயிஸ் என்ற கப்பல் பிரிட்டன் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

முதலாவது மின்சார போக்குவரத்து சிக்னல் விளக்கு அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1924 : துருக்கி ஆண்கள் பல பெண்களை மணக்கும் முறையை சட்டப்படி ரத்து செய்தது.

1926 : ஹங்கேரி மேஜிக் நிபுணர் ஹாரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில், மூடியத் தொட்டியில் இருந்து சாதனை புரிந்தார்.

1940 : இரண்டாம் உலகப் போர் :- சோவியத் ஒன்றியம்  லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944 : இரண்டாம் உலகப் போர் :- ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 ஜப்பான் போர்க் கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்றனர்.

இரண்டாம் உலகப்போர் :- போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாஜி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1949 : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 
ஒரு லட்சம் பேர் வீடிழந்தனர்.
50 நகரங்கள் அழிந்தன.

1958 : தமிழ் மொழிக்கான சிறப்பு பயன்பாட்டு சட்ட மூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
முக்கிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

1960 : புர்கினா பாசோ பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்றது.

1962 : அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

17 மாத தேடுதலுக்கு பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். 
இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1963 : அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் பிரிட்டன் அணு சக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1965 : பாகிஸ்தான் படையினர் எல்லைக்கோட்டைத் தாண்டி  உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவுக்குள் புகுந்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

1971 : முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973 : சோவியத் ஒன்றியம் மார்ஸ் - 6 விண்கலத்தை ஏவியது.

1979 : ஆப்கானிஸ்தானில் மாவோயிஸ்ட் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினர்.

1981 : வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984 : வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச விமானம் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.

1995 : யுகோஸ்லோவியப்  போர்கள் :- செர்பியர்களின் முக்கிய நகரான நின் நகரத்தை குரோஷியப் படைகள் கைப்பற்றின. 
இந்நாள் குரோஷியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003 : இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் மேரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010 : சிலியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

ஆப்கானிஸ்தான், படாக்சான் மாகாணத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் பத்து பேர் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.

2012 : அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 
கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe