தக்காளி விலை சற்றே குறைந்தது மக்களே..!

published 1 year ago

தக்காளி விலை சற்றே குறைந்தது மக்களே..!

சமீப காலமாகவே தக்காளியின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் தக்காளியின் விலை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் தக்காளியின் விலை அதிகரித்த சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால், இம்முறை தமிழ்நாட்டில் தக்காளியின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது.  தமிழக பாரம்பரிய முறைப்படி தக்காளி இல்லாமல்  சமைப்பதே கடினம். தற்போது, விலை உயர்வால் பெரும்பாலானோர் தக்காளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நினைக்கின்றனர்.

நாடு முழுவதும் தொடர் மழை, நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகத் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை தொடர்ந்து 40-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை விட இன்று 20 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe