ஏனுங்க.. எத்தன நாளைக்குத் தான் தெரிந்ததையே திருப்பி  செய்விங்க... புதுசா பொரிச்ச பரோட்டா போடலாம் வாங்க..!

published 1 year ago

ஏனுங்க.. எத்தன நாளைக்குத் தான் தெரிந்ததையே திருப்பி  செய்விங்க... புதுசா பொரிச்ச பரோட்டா போடலாம் வாங்க..!

பரோட்டா என்றாலே அனைவரும் நாவில் எச்சில் ஊற வைக்கும். பரோட்டாக்கு என்றே தனி சுவை உண்டு எனலாம். இதில் பலவகையான வெரைட்டியும் உண்டு. அதில் ஒன்று பொரிச்ச பரோட்டா. இது விருதுநகர் பேமஸ் பரோட்டா. இந்த சுவையான பரோட்டாவை வீட்டில் எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 8 கப்

• முட்டை - 4

உப்பு - தேவையான அளவு

• நல்லெண்ணெய் - 800 மில்லி லிட்டர்

செய்முறை:

முதலில் மைதா மாவு, சிறிதளவு தண்ணீர், முட்டை, உப்புத்தூள், இவற்றைக் கலந்து, சற்று தளர்த்தியாகப் பிசைந்து, 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து, மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.

4 மணி நேரம் மூடி வைக்கவும்.

அதன்பிறகு பூரிப்பலகை மீது சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

சிறிதளவு மாவை எடுத்து, உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, விரல்களால் தட்டி பலகை அளவு இழுத்து, விரிக்கவும்.

விரித்த மாவை மடிப்புகளாகச் செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாகச் சுற்றி, அரை அங்குல பருமனாகத் தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள பரோட்டாக்களை ஒரு தடவைக்கு 3 வீதம் போட்டு, பொன் நிறமாக, மொறுமொறுப்பாக (Deep Fry) பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த பரோட்டாக்களை ஒரு தட்டில் வைத்து, இரண்டு கைகளாலும் நெறித்து, அதன்பின் பரிமாறவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe