தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி அடைய இது தான் காரணம்- கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தகவல்...

published 1 week ago

தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி அடைய இது தான் காரணம்- கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தகவல்...

கோவை: அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை இணைந்து செயல்படுவதால் தான் தமிழ்நாட்டில் மருத்துவத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா (தனியார்) மருத்துவமனையில் 30 கோடி மதிப்பீட்டில் ரேடிஸாக்ட் டோமோதெரபி கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது.  இன்று அக்கருவியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து கருவியின் பயன்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில்  உரையாற்றிய அமைச்சர்,  இந்த ராமகிருஷ்ணா மருத்துவமனையை பொருத்தவரை இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாக நிர்வாகித்தனர் தெரிவிப்பதாகவும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிக பயனாளர்களை இந்த மருத்துவமனை பயனடைய செய்துள்ளதாக கூறிய அமைச்சர் முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளிலிருந்து காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என தெரிவித்தார். தமிழக முழுவதும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருவதாகவும் கூறினார். தற்போது மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது எனவும் அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு புதிய புதிய கருவிகள் இருப்பதையும் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனை  தனியார் மருத்துவமனை இணைந்து செயல்படுவதால் தான் தமிழ்நாட்டில் மருத்துவ துறை வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பதாக பெருமை கூறினார். மேலும் மக்களை தேடி மருத்துவம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மருத்துவ திட்டங்கள் குறித்து வெளிநாடுகளில் எடுத்துரைக்கப்படுவதாகவும் அண்மையில் நியூயார்க் நகரில் பொது சபை கூட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் மிகப்பெரிய சாதனையை செய்து கொண்டிருக்கிறது என அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமும் ஆயிரக்கணக்கான முகாம்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். புற்றுநோய் குறித்து 18 வயது நிரம்பிய நபர்களுக்கு சோதனை செய்து வருவதாகவும் திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஓராண்டில் 109 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் இது குறித்து 18 வயது நிரம்பியவர்களுக்கு சோதனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயனாளிகளுக்கு கூடுதல் நிதி உதவி அளிப்பதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பித்தவுடன் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து வந்த அமைச்சரிடம் முதிய பெண்மணி ஒருவர் அவரது கணவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்த சிகிச்சையை அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரும்படி காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்தார். அவரது மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உதவியாளர் வாகனத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும்படி கூறி சென்றார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மேயர் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe