குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி...

published 11 hours ago

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்துகுமார் பாடி இப்பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஹஃப்ஸீபா முன்னிலையில் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழியினை அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ரேஸ்கோர்ஸ் வரை குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை தடுப்பது குறித்த பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
---

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe