துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்...

published 21 hours ago

துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்...

கோவை: கோவையில் கடந்த வியாழக்கிழமையன்று இரவு கணபதி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமலக்ஷ்மி(85) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் ப்ஃரீசர் பாக்ஸில்  உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை துக்க நிகழ்விற்காக அவரது வீட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிந்த நிலையில் அன்றைய தினம் காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்த ப்ஃரீசர் பாக்ஸ்க்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டது. அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்ட போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டினுள் புகை சூழ்ந்ததால்  உடனடியாக வீட்டிற்குள் இருந்த பலரும் வெளியேறினர். அன்நிலையில் பத்மாவதி, பானுமதி ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் ப்ஃரீசர் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த அறையில் மாட்டிக்கொண்டனர். அவர்களை மீட்டபொழுது தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது வழியிலேயே பத்மாவதி என்பவர் உயிரிழந்தார். பத்மாவதி மூதாட்டி ராமலக்ஷ்மிக்கு மருமகள் ஆவார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பானுமதி(55) மற்றும் ராஜேஸ்வரன்(53) இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe