கோவையில் பொதுமக்கள் தவறிவிட்ட 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் மீட்பு...

published 6 days ago

கோவையில் பொதுமக்கள் தவறிவிட்ட 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் மீட்பு...

கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 252 மொபைல் போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தவறவிடப்பட்ட மொபைல் போன்களை  உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், காவல்துறையின் பிரத்தியேக இணையதளத்தில் மொபைல் தொலைந்தது குறித்து பதிவான புகார்களின் அடிப்படையில், இந்தாண்டு இதுவரை கோவை மாவட்டத்தில் 752 தொலைந்து போன மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.

அன்னூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் உள்ள 41 தாபாக்களில் திடீர் சோதனை நடத்தியதாகவும் அதில் 11 தாபாக்களில் 250 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறிய அவர், அந்த தாபாக்களுக்கு சீல் வைக்க இருப்பதாகவும் கூறினார். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இதுவரை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டதாக கூறிய அவர், காவல்துறையின் இந்த நடவடிக்கையால் கல்லூரி மாணவர்களிடையேயான போதைப்பொருள் புழக்கம் குறைந்துள்ளதாக கூறினார். மேலும், வேறு ஏதேனும் வகையில், போதைப் பொருள் புழக்கம் இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும் தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று போதைக் காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கூலிப், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுப்பதற்காக கடந்த 20 நாட்களாக சிறப்பு சோதனை நடத்தப்பட்டு 350 கிலோ கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறிய அவர், 170-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், போதைப் பொருள் தடுப்பு குறித்து தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe