ஓசூரில் அரங்கேறிய சம்பவம்- கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

published 3 hours ago

ஓசூரில் அரங்கேறிய சம்பவம்- கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: ஓசூர் நீதிமன்றம் வளாகத்தின் அருகில் வழக்கறிஞர் கண்ணன் சீருடையில் இருக்கும் பொழுதே ஒருவரால் கொடூரமாக அரிவாளால் தாக்கப்பட்டார்.

இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவினர்  தமிழக அரசினையும் மத்திய அரசையும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி கோவை நீதிமன்றம் வளாகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட 
வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்வது தொடர்கதையாக இருக்கிறது எனவும் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு எடுத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe