கோவையில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட மழை நீர்...

published 2 weeks ago

கோவையில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட மழை நீர்...

கோவை: கோவையில் நேற்று மாலை சுமார் 6 மணி முதல், இரவு 9 மணி வரை மூன்று மணி நேரம் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மாநகரில் காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, உக்கடம், பீளமேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொண்டாமுத்தூர், தடாகம், கணுவாய், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாக அவிநாசி மேம்பாலம், கிக்கானிக் பாலம், சாய்பாபா காலனி ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பாலங்களுக்கு அடியிலும், லாலிரோடு சாலை, காளப்பட்டி சாலை, தடாகம் சாலை, வடகோவை சாலை, பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் தேங்கி இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே வாகனங்களை இயக்கி சென்றனர்.

இந்நிலையில் இரவோடு இரவாக மாநகராட்சி நிர்வாகம் தேங்கிய மழை நீர் அகற்றியது. பாலசுந்தரம் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புதிதாக போடப்பட்டுள்ள ரெடிமேட் மழை நீர் வடிகாலால் சாலைகளில் தேங்கிய மழை நீர் விரைவாக வடிந்தது. இதனால் காலையில் முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் இயல்பாக சூழல் நிலவியது பணிகளுக்கு செல்வோர் இடையூறு இல்லாமல் வாகனத்தில் பயணித்தனர்.

அதே சமயம் கனமழை பெய்யக் கூடும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe