கோவையில் வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களுக்கு பணியானைகளை வழங்கிய தொழிலாளர் துறை அமைச்சர்

published 1 year ago

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களுக்கு பணியானைகளை வழங்கிய தொழிலாளர் துறை அமைச்சர்

கோவை: இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே தமிழக அரசின் நோக்கம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சிவி.கணேசன் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சிவி.கணேசன், வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு  இளைஞர்களுக்கு பணி ஆணையினை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சி.வி. கணேசன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் ஆணைகினங்க இதுவரை 1லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். 2வது வேலை வாய்ப்பு முகாம் இன்று கோவையில் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 20 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். டிசம்பர் மாதம் இறுதிக்குள் 100 வேலைவாய்ப்பு முகாம் நடத்தி முடிக்கப்படும்.

100வது வேலை வாய்ப்பு முகாமில் முதமலமைச்சர் பங்கேற்று பணிக்கான ஆணையை வழங்குவார்.
72 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிறோம்.

இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே நோக்கம். இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 7.5 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதே நோக்கம்.

இனி வரும் முகாமில் மாற்று திறனாளிகளுக்கு அதிகம் கவனம் செலுத்துவோம்.

என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe