இந்த மாதம் வெளியாக இருக்கும் முக்கிய நடிகர்களின் படங்கள்: அதிக வசூலைப் பெறப்போவது எது?

published 1 year ago

இந்த மாதம் வெளியாக இருக்கும் முக்கிய நடிகர்களின் படங்கள்: அதிக வசூலைப் பெறப்போவது எது?

இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் வாரம் 10 மற்றும் 11ம்  தேதிகளில் சில பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதிலும் இவை தமிழ் மட்டும் இல்லது பிற மொழிகளிலும் இந்தியா முழுவதும் நடிகர்களின்  படங்கள் வெளியாகின்றன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் நடிகருமான ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் பல படங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்த நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் 'போலா சங்கர்' படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவர உள்ளது.

 ஹிந்தியில் அக்ஷய்குமார் நடிக்கும் 'ஓஎம்ஜி 2', சன்னி தியோல் நடிக்கும் 'கடார் 2' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகின்றன.

ஹிந்தியில் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரஜினிகாந்த், சிரஞ்சீவி படங்களுக்கு வட இந்தியாவில் அதிகமான தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதே சமயம் இருவருக்கும் அவரவர் மாநிலங்களிலும் நிறைய தியேட்டர்களில் அவர்களது படங்கள் வெளியாகின்றன.

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' டிரைலர் தமிழில் 16 மில்லியன், தெலுங்கில் 4.8 மில்லியன், ஹிந்தியில் 3.1 மில்லியன், கன்னடத்தில் 3 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிரஞ்சீவியின் 'போலா சங்கர்' தெலுங்கில் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுக்குமே முன்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் 'ஜெயிலர்' படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe