கோவையில் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் கைவரிசை.. சிசிடிவி கேமராவையும் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்

published 1 year ago

கோவையில் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் கைவரிசை.. சிசிடிவி கேமராவையும் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்

கோவை : கோவையில் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த கும்பல் சிசிடிவி கேமராவின் டி.வி.ஆர்., கருவியையும் தூக்கி சென்றுள்ளனர். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு புதூர் திருமகள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58), இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர். இவர் கடந்த 3ம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார்.

பின்னர் அவர் அங்கிருந்து 5ம் தேதி தனது செல்போனில் வீட்டில் இணைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றபோது, இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த ராஜேந்திரன் தனது பக்கத்து வீட்டுக்காரரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார்.

அவர் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கவில்லை, பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா தொடர்ந்து இயங்காமல் இருந்ததால், சந்தேகமடைந்த ராஜேந்திரன் நேற்று முன்தினம் கோவை வந்தார்.

வீட்டுக்கு சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், செயின், வளையல், மூக்குத்தி உட்பட 36.75 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து ராஜேந்திரன் பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில், கொள்ளையடித்த மர்ம நபர்கள் தாங்கள் சிக்காமல் இருக்க சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்., கருவிகளை தூக்கி சென்றது தெரிந்தது.

இந்நிலையில், வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் 2 கைரேகை பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe