கோவை அதிரடி நடவடிக்கை பெண் மீது கந்து வட்டி வழக்கு

published 2 years ago

கோவை அதிரடி நடவடிக்கை பெண் மீது கந்து வட்டி வழக்கு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை, ஜூன்.10- தமிழக டி.ஜி.பி.  சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ தொடர்ந்து ஆபரேஷன் கந்துவட்டி எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கந்துவட்டி, ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து ஆபரேஷன் கந்துவட்டி மூலம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.  வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல் சொத்து பத்திரங்களைப் பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாகக் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 34) என்பவர் பெரியகடை வீதி காவல்துறை நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்திரா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புகாரில் கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சந்திரா என்பவரிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கினேன். சில காரணங்களால் என்னால் 2 மாதம் வட்டி தர முடியவில்லை. இதனால் மீண்டும் அவரிடம் ரூ. 44 ஆயிரம் வாங்கினேன். ஆனால் அவர் பணம் திருப்பி தரும் காலம் முன்னரே ரூ. 44 ஆயிரத்திற்குக் கூடுதல் வட்டி கேட்டு ரூ.60 ஆயிரமாகத் திருப்பி கேட்கிறார். மேலும் எனது குடும்பத்தைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார் பெண் சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து முதல் கந்து வட்டி வழக்கு பெண் மீது பாய்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe