உருமாண்டம் பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பிரதிஷ்டை விழா.

published 1 year ago

உருமாண்டம் பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பிரதிஷ்டை விழா.

கோவை : கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டம்பாளையத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு உற்சவ விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஐம்பொன் சிலையில் உருவான பண்ணாரி மாரியம்மன் சிலையைக் கோவிலின் மூலஸ்தானத்தில் வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 54 மூலிகைகள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. 

இதற்காகப் பக்தர்கள் அனைவரும் ஹோம குண்டத்துக்கான மூலிகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினர். அதன்பிறகு பூர்ணகுதி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அம்மன் விக்ரகத்திற்குக் கண் திறப்பு, கண்ணாடியில் முகம் பார்க்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மன் விக்ரத்திற்கு பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், திருமஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், திருநீர், பூக்கள் சகிதம் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

இதற்காக சத்தியமங்கலம் பண்ணாரியக்கன் கோவில், வனபத்திரகாளியம்மன் கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளக்கிணர் பெரிய நாயகி அம்மன் கோவில், முத்தூர் செல்வகுமார் கோவில், காசி –ராமேஸ்வரம் கோவில், பொன்னர்-சங்கர் ஆலயம் உள்ளிட்ட கோவில்களிலிருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது. 

அவற்றின் மூலம் மாப்பிள்ளை விநாயகர், வில்வமரம், வேல், அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்குத் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டன. அதன்பிறகு அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. முன்னதாக கோவிலில் அரங்கேறிய வாய்கட்டு சுற்றுப் பூஜையின் போது கலசம், சாட்டை, கத்தி, பழ வகைகள், பூக்கள், கண்ணாடி, திருநீறு வைக்கப்பட்டு பூசாரிகள் சன்னிதானத்தைச் சுற்றி வலம் வந்தனர். அதன்பிறகு உற்சவர் சுற்றுப் பூஜை நடைபெற்றது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe