அரோகரா! கோவையில் ஆடி கிருத்திகைக்கு முருகனுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

published 1 year ago

அரோகரா! கோவையில் ஆடி கிருத்திகைக்கு  முருகனுக்கு 108 பால்குடம்  அபிஷேகம்

கோவை: கோவையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகன் அடிமை கட்டளைப்படி அமைப்பின் சார்பாக 47வது ஆண்டு, மருதமலை முருகனுக்கு 108 பால்குடம் எடுத்து முருகனை பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த சிறப்புப் பூஜையானது கோவையுள்ள மருதமலை அடிவாரத்தில் ரங்கா ஹாலில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருகனுக்குப் பிரியமான வேல் மற்றும் காவடிக்குச் சிறப்புப் பூஜைகள் அபிஷேகங்களைப் பக்தர்கள் செய்து பக்தி பொங்க முருகனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கைகளில் மங்கள நாண் கட்டி, 108 பால் குடத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்து முருகனை வழிபட்டு, பால் குடத்திற்கான  சிறப்புப் பூஜைகள் செய்து பால் ஊற்றி முருகனை வணங்கினர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் மருதமலை திருக்கோவிலுக்குப் பால் குடம் எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கள் வழியாக நடந்து சென்று, பூஜைக்குப் பால் குடத்தை எடுத்துச் சென்றன. இந்த பாலினால் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அரோகரா அரோகரா என்று பக்தர்கள் முருகனை அழைக்க  இதனைத் திருக்கோவில் அர்ச்சகர்கள் மேள மந்திரங்கள் முழங்க, முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்தனர்.

இந்த ஆடிக் கிருத்திகை  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முருகன் அடிமை கட்டளைப்படி விழாக் குழுவின் தலைவர் சுமதி பன்னீர்செல்வம், செயலாளர் ரஞ்சித்குமார் சரண்யா, பொருளாளர் பேபி குமரேசன், ஆலோசகர்களான மும்மூர்த்தி, செந்தில் குமார், மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முருகப்பெருமானைப் பயபக்தியுடன் வணங்கி மகிழ்ந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe