திறன்களே மூலதனம் ; வீட்டிலிருந்தே தொழில் செய்ய வாய்ப்பு

published 1 year ago

திறன்களே மூலதனம் ; வீட்டிலிருந்தே தொழில் செய்ய வாய்ப்பு

கோவை :  மனோ சாந்தி  மற்றும் தோழிகள் அறக்கட்டளை சார்பில், மகளிர் மற்றும் குழந்தைகள் திறன் மேம்பாடு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்வேறு காரணங்களால் படித்த, படிக்காத பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் தொடர்கிறது. குறிப்பாக, மகப்பேறு காலங்களுக்குப் பின், தனிக்குடும்ப வாழ்க்கை முறையால் குழந்தைகளைப் பராமரிக்கும் மிகப்பெரிய சவால் காரணமாக, பலரால் வேலைக்குச் செல்ல  முடிவதில்லை. மேலும், மாற்றுத்திறன் கொண்ட பெண்கள், மாற்றுத்திறன் குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வேலைக்குச் செல்வது இயலாத காரியம். 

இதுபோன்ற பெண்களுக்கு உதவும் வகையில், கேக் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு, சோப், காளான் வளர்ப்பு, சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிப்பு, அழகுக் கலை, புடவை நவீன முறையில் மடித்தல், அயர்னிங், பார்சல் டெக்னிக்ஸ் உட்பட பல்வேறு பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தவிர, கல்லூரி செல்லும் பெண்களையும் படிக்கும் போதே தொழில்முனைவோராக மாற்றும் வகையில் கல்லூரிகளிலும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அரசு கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்துள்ள பெண்கள், கணவன் இன்றியோ இருந்தும் ஆதரவு இன்றியுள்ள (சிங்கிள் மதர் ) பெண்களுக்கு  மையம் சார்பில் இலவச பயிற்சிகள் அளிக்கப்படும். 

இப்பயிற்சி மையம் சார்பில், வரும் 13ம் தேதி அழகுக்கலையின் ஒரு பிரிவான சாரி டிரேப்பிங், மசாலா பொருட்கள் தயாரிப்பு ஒரு நாள் பயிற்சி கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபம் அருகில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் பயிற்சி, காலை, 10:00 மணி முதல் 4:00 மணி வரை நடக்கும். பயிற்சியாளர்கள் ஒவ்வொரு பயிற்சியிலும் வீட்டிலேயே தொழில் துவங்க ஆலோசனையும், அரசு கடன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கபார்கள். ஆர்வமுள்ளவர்கள் பெயர்களை வாட்ஸ் அப்  மூலம் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம் –9677796868. முழுமையாகப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இப்பயிற்சிகள் உதவும். குறைந்த ஊதியத்தில் பணிக்குச் செல்லும் பெண்களும் இப்பயிற்சியில் பங்கேற்று பகுதி நேரமாகத் தொழிலை மேற்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe