கோவையில் போலீசார் எப்படி சுதந்திர தின அணிவகுப்பு நடத்துறாங்க..! | புகைப்பட தொகுப்பு

published 1 year ago

கோவையில் போலீசார் எப்படி சுதந்திர தின அணிவகுப்பு நடத்துறாங்க..! | புகைப்பட தொகுப்பு

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் காவல்துறை அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு, பல்வேறு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் என எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில், வ.உ.சி  மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துவார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

இந்நிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை கோவை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீஸ் நேரில் பார்வையிட்டார். நாளைய தினம் நடைபெற உள்ள காவல்துறை அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe