12 ராசிகளுக்குமான இன்றைய (15ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : எண்ணங்களை அறிவீர்கள்.
பரணி : அனுகூலம் ஏற்படும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
புதுவிதமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். மாற்றமான செயல்களால் புதிய பாதைகளை உருவாக்குவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிதுபடுத்தாமல் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான அசதி ஏற்பட்டு நீங்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும். பரிசுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
கன்னி
வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடனிருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலகி இருந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார விருத்திக்கான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : விருத்தி உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஒற்றுமை பிறக்கும்.
அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை : தேடல் பிறக்கும்.
---------------------------------------
தனுசு
எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : திட்டமிட்டு செயல்படவும்.
பூராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
உத்திராடம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.
---------------------------------------
மகரம்
சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி பிறக்கும். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவுகள் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவு பிறக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : வரவுகள் உண்டாகும்.
சதயம் : நட்பு கிடைக்கும்.
பூரட்டாதி : முடிவு பிறக்கும்.
---------------------------------------
மீனம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். இலக்கிய பணிகளில் ஈடுபாடு ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------