கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்பட உள்ளது சிறப்பு ரயில்... இந்தியாவின் முதல் தனியார் ரயில்.. கட்டணம் என்ன?

published 2 years ago

கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்பட உள்ளது சிறப்பு ரயில்... இந்தியாவின் முதல் தனியார் ரயில்.. கட்டணம் என்ன?

 கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கோவையிலிருந்து சீரடிக்கு நேரடி போக்குவரத்து இயக்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சீரடிக்கு ஐந்து நகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு, பிரதமர் மோடியின் 'பாரத் கவுரவ்' என்ற திட்டத்தின் கீழ், ரயில்வே துறை அனுமதி அளித்தது.

இதில், கோவையும் இடம் பெற்றுள்ளது. கோவையிலிருந்து சீரடிக்கும், சீரடியிலிருந்து கோவைக்கும் வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது.

ஆந்திரா மாநிலம், மந்த்ராலயா வழியாகச் செல்வதால், அங்கு செல்லும் பக்தர்கள் இரண்டு கோவில்களுக்கும் செல்ல உதவியாக இருக்கும். இந்த ரயில் இந்தியாவில் முதல் முறையாக தனியாரால் இயக்கப்படவுள்ளது.

மிகவும் துாய்மையாகவும், சர்வதேச தரத்திலான விருந்தோம்பலுடனும், இந்த ரயிலின் சேவை அமையுமென்று, ரயில்வே அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ரயில் வரும், 14 ம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரயிலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. கோவையில், ஐந்து, திருப்பூர், ஈரோட்டில், தலா ஒரு இடத்திலும் டிக்கெட் கிடைக்கிறது. இதுதவிர, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூரில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களிலும், டிக்கெட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டண விபரங்கள்

டிக்கெட் கட்டணம்

Sleeper : ரூ.2500
3rd AC : ரூ.5000
2nd AC : ரூ.7000
1st AC : ரூ.10,000

பேக்கேஜ் கட்டணம்

Sleeper : ரூ.4999
3rd AC : ரூ.7999
2nd AC : ரூ.9999
1st AC : ரூ.12,999

பேக்கேஜ் கட்டணத்திற்கு உட்பட்டவை

* கோவையில் இருந்து சீரடி சென்று திரும்பும் வரை ரயில் கட்டணம்

* சீரடியில் சிறப்பு தரிசனம்

* மூவர் தங்கும் குளிர்சாதன ரூம் வசதி

* டூர் வழிகாட்டி மற்றும் பயண இன்சூரன்ஸ்

உணவு மற்றும் மந்தராலய தரிசனம் தனிப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe