கோவையில் வரும் ஆகஸ்ட் 19, 20 ஆம் தேதிகளில் ஸ்டார்ட் அப் திருவிழா..

published 1 year ago

கோவையில் வரும் ஆகஸ்ட் 19, 20 ஆம் தேதிகளில் ஸ்டார்ட் அப் திருவிழா..

கோவை : ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், 

தமிழகத்தின் புதுத் தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புதுத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, கோயமுத்தூர் கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இருநாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்வினை நடத்துகின்றது.

இதில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகவும்  வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் T.R.B.ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சந்தித்த ஸ்டார்ட் தமிழ்நாடு இயக்குனர் சிவராஜா ராமநாதன் கூறுகையில்,

புத்தொழில் நிறுவனங்களுக்காகத் தமிழக அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.இந்நிகழ்வில், தொழில்முனைவோர்கள் - முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.மாபெரும் தொழில் கனவு என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும் எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe