கோவையை புரட்டி போட்ட இசைப்புயல்.. கான்ஸர் புகைப்படங்கள்.

published 1 year ago

கோவையை புரட்டி போட்ட இசைப்புயல்.. கான்ஸர் புகைப்படங்கள்.

கோவை: கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற இசைப்புயல்  ஏ.ஆர் ரகுமானின் 30 ஆண்டுகள் ரஹ்மானியா இசை நிகழ்ச்சிக்கான பிரத்யோக புகைப்படங்கள்.

படங்கள் : பால் பாண்டி

 

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆவார்.  அவர் தேசத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவர்.

AR ரஹ்மான் தமிழ் திரைப்படமான "ரோஜா" (1992) இல் தனது இசை மழையில் அனைவரையும் மகிழ வைத்து பணிக்காக அங்கீகாரம் பெற்றார், இது அவருக்கு சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த் திரையுலகில் இசை புயல் (இசைப் புயல்) என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அவர் "ஸ்லம்டாக் மில்லியனர்" (2008) இல் தனது இசையால் அனைவரின் நெஞ்சை கவர்ந்து  சர்வதேச நற்பெயரையும் பாராட்டையும் பெற்றார், அதற்காக அவர் இரண்டு அகாடமி விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் ஆகியவற்றை வென்றார்.

இவரின் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் பத்ம பூஷன் மற்றும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரோஜா வெளியாகி 30 வருடங்கள் ஆகிறது, இசைப்புயல், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் அபாரமான பயணத்தை நாம் கண்டிருக்கிறோம்.

அவரின் இசையில் காதல் வசப்பட்டு, ஸ்ட்ரெஸ் எல்லாம் கரைந்து, அவரின் இசையில் நம் மனது நனைந்து கொண்டே இருக்கட்டும்.!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe