கோவையில் 249 கடைகளில் ஆய்வு :44.593 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்

published 1 year ago

கோவையில் 249 கடைகளில் ஆய்வு :44.593 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன்,  தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களால் திடீர் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அத்திடீர் கள ஆய்வில் சுமார் 249 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அக்கள ஆய்வின் போது 24 கடைகளில் சுமார் 44.593 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும்த் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு  சுமார் ரூபாய். 44,593 ஆகும்.  

மேலும் களஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 24 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருள் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த 24 கடைகளுக்கு அபராதமாக ரூபாய்.5000 வீதம்  மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 இது போன்ற திடீர் களஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் எனவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி,  தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe