12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

published 1 year ago

12 ராசிகளுக்குமான துல்லியமான ராசிபலன்

12 ராசிகளுக்குமான இன்றைய (26ம் தேதி ) ராசிபலன்

மேஷம்

பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.  மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : மதிப்பு கிடைக்கும்.

பரணி : ஈடுபாடு உண்டாகும்.

கிருத்திகை : தேடல் அதிகரிக்கும். 
---------------------------------------

ரிஷபம்
 

குடும்பத்தில் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இழுபறியான சூழல் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகளின் மூலம் வருத்தம் உண்டாகும். கால்நடை பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : வாதங்கள் மறையும்.

ரோகிணி :  இழுபறியான நாள்.

மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும். 
---------------------------------------

மிதுனம்

வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். கற்பனை துறைகளில் மேன்மை ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.

திருவாதிரை :  உற்சாகமான நாள்.

புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------

கடகம்
 

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிரமம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  

புனர்பூசம் :  சாதகமான நாள்.

பூசம் : ஆலோசனை கிடைக்கும்.

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------

சிம்மம்
 

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மாற்றமான நாள்.

பூரம் : ஆர்வம் ஏற்படும்.

உத்திரம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------

கன்னி
 

வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் :  ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் : தடைகள் விலகும்.

சித்திரை : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------

துலாம்
 

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : நம்பிக்கை உண்டாகும்.

சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------

விருச்சிகம்
 

தடைபட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 விசாகம் : மாற்றம் பிறக்கும்.

அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.

கேட்டை : முடிவுகள் பிறக்கும்.
---------------------------------------

தனுசு
 

கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். கம்பீரமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஓய்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : குழப்பம் குறையும்.

உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------

மகரம்
 

வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : தெளிவு பிறக்கும்.

அவிட்டம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------

கும்பம்
 

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : மதிப்பு மேம்படும்.
---------------------------------------

மீனம்
 

அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe