ஒட்டு மொத்த இந்தியாவிலும் நம்ம கோவைக்கு தான் 'First Rank' | மத்திய அரசின் முதல் பரிசு வென்றது கோவை..

published 1 year ago

ஒட்டு மொத்த இந்தியாவிலும் நம்ம கோவைக்கு தான் 'First Rank' | மத்திய அரசின் முதல் பரிசு வென்றது கோவை..

கோவை கோவையில் ஸ்மார்ட் சிட்டிக்கான வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில், 'ஸ்மார்சிட்டி விருது-2022'', ISAC (India Smart city Award Contest) விருதுகள் ஸ்மார்ட்சிட்டி மிஷன் இயக்குனரால் நேற்று அறிவிக்கப்பட்டது.

நமது கோவை இதில் ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் (Built Environment Category) முதல் பரிசு தட்டி சென்றுள்ளது. இந்த விருது வழங்குவதற்கான நோக்கம் ஸ்மார்ட்சிட்டி கீழ் சிறப்பான பணிகளை மேற்கொண்டதே ஆகும்.

கோயம்புத்தூரில் முக்கியமான சாலைகளான ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் சாலைபோன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது. இதனால் நம்ம கோவைக்கு மத்திய அரசு முதல் ரேங்க் என்ற பெருமையை அளித்துள்ளது.

இந்த விருதுக்காக இந்தியாவில் 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிறந்த சீர்மிகு நகரங்களுக்கான விருதில் கோயம்புத்தூர் இந்தியாவிலே முதல் பரிசு பெற்றுள்ளது.இந்த விருதானது செப்டம்பர் 27-ம்தேதி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளது.  

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஊக்குவித்துச் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்குத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய ஜனாதிபதிதிரவுபதி அவரால் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது

பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடைபெற்ற தேர்வில், சீர்மிகு நகரத் திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழ்நாட்டுக்குத் தேசிய அளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

நமது கோவை  'ஸ்மார்சிட்டி விருது-2022'', முதலிடம் பெற்றது பெருமைக்குரியதாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe