கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

published 1 year ago

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை வீடு வீடாக விசாரணை செய்ய ரேஷன் கடை பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது, இந்த சிறப்புச் செயலாக்கத் திட்டத்திற்கு ஒரு கார்டுக்கு 50 பைசா வழங்குவதைத் தவிர்த்து ரூ 5 வழங்க வேண்டும். 

பணியில் உள்ள பணியாளர்களுக்குப் பதவி உயர்வு அளித்த பின்னரே புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அயல் பணி, பணி பரவல், வெளி மாவட்ட மாறுதல் போன்றவற்றை மண்டல இணை பதிவாளரின் அதிகார வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம்  ரூ.ஆயிரம் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe