கோவையில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 1,637 பேர் ஆப்சென்ட்

published 1 year ago

கோவையில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 1,637 பேர் ஆப்சென்ட்

கோவை: கோவையில் 4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. 1,637 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி  கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய நான்கு மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe