கோவையில் எங்க போனாலும் போலீஸ் வளைச்சு புடிக்கிறாங்களா..? இது தான் காரணம்..!

published 1 year ago

கோவையில் எங்க போனாலும் போலீஸ் வளைச்சு புடிக்கிறாங்களா..? இது தான் காரணம்..!

கோவை: கோவையில் நகை பறிப்பு, பைக் திருடர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த 3 நாட்களில் ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 பெண்களிடம் 20 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நகைப்பறிப்பு திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் நகைபறிப்பு நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் திருடர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தி உள்ளனர். நகரில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், காலை 5 மணி முதல் 8 மணி வரையும் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

பைக் மற்றும் கார்களில் வருபர்களை சோதனை செய்து விசாரணை நடத்திய பின்னரே அனுமதித்தனர். நகைபறித்து சென்ற ஆசாமிகள் திருட்டு பைக்கில் தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe