காஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: 200 ரூபாய் வரை குறையலாம் என மத்திய அரசு அறிவிப்பு

published 1 year ago

காஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு: 200 ரூபாய் வரை குறையலாம் என மத்திய அரசு அறிவிப்பு

புது டில்லி: காஸ் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. காஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.200 வரை குறைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத் தொடக்கத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) உள்நாட்டுச் சமையல் எரிவாயுவின் விலையில் மாறுதல் எதையும் ஏற்படுத்தாவிட்டாலும், வணிக ரீதியான எல்பிஜி-கான (திரவ பெட்ரோலியம் எரிவாயு) விலையில் திருத்தம் செய்தது. ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்ட இந்த விலை மாற்றத்தின் மூலம், 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறிப்பிடத்தக்க வகையில் ரூ.92. 50 குறைந்து, 19 கிலோ சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை தற்போது ரூ.1,798.50 ஆக இருந்து வருகிறது.

வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நடப்பு ஆண்டு மார்ச் 1 முதல் மாறாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் இரண்டு முறையும், ஜூலை மாதத்தில் ஒரு முறையும் விலை உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ. 50 அதிகரித்துள்ளது. தற்போது கோவையில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,132 ஆக உள்ளது.

வணிக மற்றும் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களுக்கான மாதாந்திர விலை திருத்தங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நடைபெறும். பொதுவாக, அரசு நடத்தும் OMC-கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலைகளை வழக்கமாக மாற்றியமைக்கும். மேலும் உள்ளூர் வரிகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக மாநிலங்களுக்கு இடையே விலைகள் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தின் விலை திருத்தம் வெளியிடப்படும் போது ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 200 வரை குறைய வாய்ப்புள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe