கோவையில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாகும் Experience Center..!

published 1 year ago

கோவையில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாகும் Experience Center..!

கோவையில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாகும் Experience Center..!

கோவை:  சீர்மிகு நகரத்திட்டத்தில் ரூ.62.06 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் புனரமைக்கப்படும் பணிகளில் ஒரு பகுதியாக அனுபவ மையம் (Experience Center) அமைக்கப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்கடம் பெரியகுளக்கரையில் அனுபவ மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு உள்ள பணிகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் 3டி வடிவத்தில் திரையிட்டு காட்டப்படும்.

மேலும், இது தவிர குழந்தைகளை கவர 3டி விளையாட்டு அம்சங்களும் உள்ளன.

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த குளக்கரையில் பொதுமக்களை கவர்ந்து இழுக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த அனுபவ மையம் பொது மக்களுக்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும். இதற்கான பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவாறு அவர் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe