கோவையில் 'டே வித் போலீஸ்' நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மாணவிகள்.

published 1 year ago

கோவையில் 'டே வித் போலீஸ்' நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மாணவிகள்.

கோவை : 'ஏ டே வித் போலீஸ்' நிகழ்ச்சியில், மாணவிகள் குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர்.

கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன், துவங்கிய 'பிராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.ஓ' திட்டத்தில், மாவட்ட போலீசார் பள்ளி குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பள்ளி மாணவிகளுக்கு, தற்காப்பு கலையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், 30 மாணவிகளுக்கு, திங்கள் முதல் வியாழன் வரை, நான்கு நாட்கள் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

அவர்களுக்கு, நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், 'ஏ டே வித் போலீஸ்' என்ற நிகழ்ச்சி, எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணவிகள் அனைவரும் பி.ஆர்.எஸ்., வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த போலீசாரின், நினைவு துாண்களை பார்வையிட்டனர்.

அதன் பின், கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில், போலீசாரின் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும், கோவை ரைபிள் கிளப்பையும் பார்வையிட்டனர்.
அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி, மாணவிகளுக்கு உயர் அதிகாரிகள் விளக்கினர்.

மாணவிகள் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை எடுத்து, குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர். இறுதியில், அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், அனைத்து மாணவிகளுக்கும் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe