ரத்தினபுரியில் இரண்டு கார்களை தீ வைத்து எரிப்பு.. பரபரப்பு..

published 1 year ago

ரத்தினபுரியில் இரண்டு கார்களை தீ வைத்து எரிப்பு.. பரபரப்பு..

கோவை: ரத்தினபுரியில் இரண்டு கார்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை ரத்தினபுரியில் நேரு வீதி உள்ளது. இங்குள்ள பள்ளி அருகே அந்தப் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று இரவு தங்களது கார்களை நிறுத்தியிருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களுக்கும் தீ வைத்து தப்பி சென்றனர்.

கார் மளமளவென தீ பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மற்றொரு கார் முன் பகுதி மட்டும் எரிந்தது. இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்களை தீவைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe