"என்னை பார்த்தால் பயப்படும் ஆள் போல தெரியுதா?" : கோவையில் சீமான் பேட்டி

published 1 year ago

"என்னை பார்த்தால் பயப்படும் ஆள் போல தெரியுதா?" : கோவையில் சீமான் பேட்டி

கோவை: என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயபடும் ஆள் போல் தெரிகிறதா என்று கோவையில் கைது குறித்து எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி தம்மிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து கொண்டு விட்டார் என  குற்றம்சாட்டி வரும் நிலையில்,  இது குறித்தான வாக்குமூலத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலிசார் சீமானிடம் விசாரணை நடத்த உதகை விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இதனிடையே சீமான் உதகையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு  நேற்று இரவு வந்தார்.

இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலால் நாடே பரபரப்பாக தானே காணப்படுகிறது, அப்போது அண்ணனை என்னை சுற்றியும் ஒரு பரபரப்பு இருக்கும் தானே.

தனிப்படை குறித்தான கேள்விக்கு, உதகையில் என்னை கைது செய்திருக்கலாம், அப்படியே வழக்கு என்றாலும் சென்னையில் தானே பிரச்சனை, நான் தான் நாளை மறுநாள் சென்னைக்கு சென்று விடுவேனே அங்கு சென்ற பிறகு அழைப்பாணை வழங்கி இருக்கலாம் என பதிலளித்தார்.

என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயபடும் ஆள் போல் தெரிகிறதா?. பயந்திருந்தால் இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்க முடியுமா? சம்மன் வந்தால் சட்டப்படி சந்திப்போம், அரசியல் என்றால் அரசியல் படி சந்திப்போம் என பதிலளித்தார்.

இது குறுத்து வழக்கறிஞர் சிவக்குமார் கூறுகையில்,

"இந்த வழக்கு 2011ல் புனையப்பட்டது. அதனை தொடர்ந்து சிலரின் தூண்டுதலால் புகார் அளிக்கப்பட்டதாக அவரே(விஜயலட்சுமி) கைப்பட எழுதி கொடுத்துள்ளார். சீமானை கைது செய்ய வேண்டுமென்றால் எப்போதோ செய்திருக்கலாம். தற்போது அவரை அரசியலில் பழிவாங்க வேண்டும் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்கள்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe