கோவையில் பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை

published 1 year ago

கோவையில் பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:

ஒவ்வொரு மாதமும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் குறித்தும், அவற்றை தவிர்க்க  மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட்பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது,சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். 

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் சாலைகளில்  தேவையான இடங்களில் வேகத்தடையும், சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களை பாதசாரிகள் கடந்த செல்லாதவாறும் அமைக்கவேண்டும். தேவையான இடங்களில் சாலையின் இருபுறமும் போதுமான அளவு மின்விளக்குகள் அமைத்தல், ஒளிரும்பட்டைகள், எச்சரிக்கை பலகை, ரவுண்டனா , தானியங்கி சிக்னல்கள், உயர் கோபுர மின்விளக்குகள், சாலையின் நடுவில் வெள்ளை நிறக்கோடுகளை இடுதல் உள்ளிட்ட பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ளவேண்டும். 

மேலும் தேவையான இடங்களில் சாலைகளை அமைப்பதுடன், அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe