கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்

published 1 year ago

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட உதவி கணக்கு சத்துணவு அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவியாளர் சமையளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதி நிலைகளை உடனடியாக வழங்க வேண்டும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட பொருளாளர் சுதா மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் சுசிலா ஆகிய இருவரையும் உடனடியாக அதே இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும், ஆனைமலை ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,

சத்துணவு மையத்தை ஆய்வு செய்யும் பொழுது உதவி கணக்கு அலுவலர் லட்சக்கணக்கான ரூபாயை அபராத தொகையாக விதிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe