கோவை மாவட்ட காவல் நிலையங்களுக்கு பிரத்தியோக ரோந்து காவலர்கள் நியமனம்...!

published 1 year ago

கோவை மாவட்ட காவல் நிலையங்களுக்கு பிரத்தியோக ரோந்து காவலர்கள் நியமனம்...!

கோவை: கோவை மாவட்ட காவல் நிலையங்களுக்கு பிரத்தியோகமாக ரோந்து காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் சுழற்சி முறையில் பணிபுரிய 1 முதல் 3 ரோந்து காவலர்கள் என 83 ரோந்து காவலர்களை பிரத்தியோகமாக நியமித்தார்.

 

இந்த ரோந்து  காவலர்கள் காவல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் செயல்படுவர். ரோந்து காவலர்களின் அன்றாட பணிகளை உடனுக்குடனே ஸ்மார்ட் காவலன் செயலியில்(Smart Kavalan App) பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு 2 முதல் 6 ரோந்து காவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் எனவும், மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை தடுப்பதுடன், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படுத்தும் வகையிலும் பணிபுரிய வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோந்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மேலும், ரோந்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, ரோந்து பணியின்போது அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe