எப்படா வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்த கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்

published 1 year ago

எப்படா வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்த கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்

கோவை : கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான, திட்ட முறைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதால், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னை விமான நிலையத்துக்கு அடுத்து, கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து 2 வெளிநாட்டு விமானங்கள் மற்றும் 22 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 25 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றன. இதனால் அதற்கான வருவாயும் அதிகரித்து கொண்டே வருகிறது.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு முக்கியமான காரணம், தொழில் வளர்ச்சியை விரிவுப்படுத்துவதே ஆகும்.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) 558.87 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் 'அனுமதியின் பேரில் நுழைய' வழங்கும் நடவடிக்கைகளை வெளியிட்டார்.

இதற்கான பணிகளை செய்ய ஆர்க்கிடெக்ட் நிறுவனம் 'ஜியான் பி.மாத்துார் அசோசியேட்ஸ்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் புதிய பிளானின் படி 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட  2 தளங்கள், பயணிகளின் வசதிற்காக 10 நுழைவாயில்கள், ஒரு மணி நேரத்திற்கு 7,000க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்ட கட்டமைப்பாக மாற்ற பிளான்கள் தயார் நிலையில் உள்ளன.

அதுமட்டுமில்லாமல் கார் பார்க்கிங், சோலார் சிஸ்டம், எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகள், லைட் செட்டிங்ஸ் என புத்தம் புது தோற்றத்துடன் தயாரா போகிறது நம் கோவை  சர்வதேச விமான நிலையம்.

இந்த விரிவாக்க பணிகள் 2 வருடங்களில் முடிக்க கால அவகாசம் முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கிடைத்து விட்டதால், விரிவாக்கப்பணியை ஆணையம் விரைவாகத் துவங்க வேண்டுமென்பதே, கோவை மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe