ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்- காப்பாற்றிய போலிஸின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...!

published 1 year ago

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்- காப்பாற்றிய போலிஸின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டார்.

 

கோவையில் ரயில் நிலையத்தில் நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் அவசரவசமாக இரண்டு பெண்கள் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில் தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து  காப்பாற்றினார்.

இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் ரயிலில் இரு பெண்கள் ஏற முயற்சிப்பதும் ஒரு பெண் ஏறிய நிலையில் மற்றொரு பெண் ஏறும்போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுவதும், அவரை தலைமை காவலர் காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/2h92Z81z3kc?si=yYcB1km0b80YE_Jw

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe