கார் ஆட்டோ மோதியதில் வாலிபர் உயிரிழப்பு- போலிசார் விசாரணை...

published 1 year ago

கார் ஆட்டோ மோதியதில் வாலிபர் உயிரிழப்பு- போலிசார் விசாரணை...

கோவை: பீளமேடு - அவிநாசி சாலையில் கார் ஆட்டோ மோதி வாலிபர் பரிதாபமாக பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் காந்திதாஸ் மகன் அமல்ராஜ்(28). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். பின்னர் வாடகை ஆட்டோவில் அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பீளமேடு தனியார் கல்லூரி அருகே ஆட்டோ வளைவில் திரும்ப முயன்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. 

இதில் தலை, இடுப்பில் பலத்த காயமடைந்த பயணி அமல்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் புருஷோத்தமன்(32) காயத்துடன் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த 19 வயது நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe