கோவையில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி- மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கேற்பு...

published 1 year ago

கோவையில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சி- மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கேற்பு...

கோவை: கோவையில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் புதிய திட்டமாக பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில், பாரதப் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் பி.சுரேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கைவினை கலைஞர்கள், விஸ்வகர்மா சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில், பாரதப் பிரதமரின் பிறந்தநாள் அன்று துவங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்கள் பிணையில்லா கடன் உதவி பெற்று தொழில் வளர்ச்சி பெற முடியும் எனவும், இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் பெரும் பயன் அடையும் எனவும் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பேசுகையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற கருப்பொருளில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இதில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் 18 வகையான தொழில்கள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், பயிற்சி முடித்த பின்பு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான தொழில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரூபாய் 2 லட்சம் வரை பினையில்ல்லா கடன் உதவி வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதோடு, அதனை சந்தைப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு தொழில் முன்னேற்றம் அடைய முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேயர்கள் வெளியேறி விட்டாலும், நமது நாட்டின் பாரம்பரிய தொழில் மற்றும் கலைகளை ஊக்குவிக்காமல் இருந்து வந்த நிலையில், பாரத பிரதமரின் முயற்ச்சியில் பாரம்பரியமிக்க கைவினை தொழில்கள் இன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துவாரகாவிலிருந்து பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நேரலை செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe