தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை டெல்லி தலைவர்கள் பேசி சரி செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி...

published 1 year ago

தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை டெல்லி தலைவர்கள் பேசி சரி செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி...

கோவை: தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய கூறியதாவது,

2019 ஆண்டு தமிழகத்தில் அதிமுக தலைமைகளில் வலுவான கூட்டணி உருவானது, அதே போல தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தும் வகையில் 25 ஆண்டு நிறைவு சாதனை விழா டெல்லியில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது இரண்டு நாட்களாக கூட்டணிக்குள் இருக்கின்ற இரண்டு(பாஜக - அதிமுக)நண்பர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் விட்டுவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

தமிழக பட்ஜெட்டில் நிறைவேற்றப்படக்கூடிய பல திட்டங்கள் சரியான நிறைவேற்றப்படாமல் கிராமங்களில் சாலைகளை போடாவில்லை,ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீரடைந்து சந்தி சிரிக்கும் விதமாக இருக்கிறது.மக்கள் விரோத திமுக கட்சியை அகற்ற தேசியத் ஜனநாயகக் கூட்டணி கட்சி நடைபெறும் ஒருமித்து செயல்படுகின்ற நேரம் இதுவாகும்.

மீண்டும் பிரதமர் மோடியை  3வது  முறையாக பிரதமராக ஆக்க அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்,தமிழகத்தில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பதற்கு டெல்லி தலைவர்கள் வந்து பேசி சரி செய்ய வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்,பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe