மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம்…

published 1 year ago

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.  

மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள், பேரூராட்சிகள்,  நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காகவும் மற்றும் மாவட்டம் முழுவதற்கும் ஒட்டு மொத்தமாக வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காகவும், மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பணியானது மாவட்டத்திற்கான வளர்ச்சி உத்திகள், திட்டங்கள் செயல் திட்டங்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டக்குழு மேற்கொள்ளும்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட திட்டக்குழு தலைவர் திருமதி சாந்திமதி அசோகன் தற்போது இரண்டாவது கூட்டம் நடைபெறுகின்றது. திட்டக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றையதினம் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகளையும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மாவட்ட திட்டக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும் என  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்,
மாவட்ட திட்டக்குழுவில் புதிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது தேவையான திட்டத்திற்கான கருத்துகள் பரிந்துரைகள் செய்யப்படும் இதன் மூலம் சிறந்த திட்டத்தை தயாரிக்க உதவியாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் அக்கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும். இதனால் வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும், இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe