பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்தாமல் ஏன் அமைதியாக இருக்கிறார்- புகழேந்தி கேள்வி...

published 1 year ago

பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்தாமல் ஏன் அமைதியாக இருக்கிறார்- புகழேந்தி கேள்வி...

கோவை: பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்தாமல் ஏன் அமைதியாக இருக்கிறார் என ஓபிஎஸ்  அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிமுக - ஓபிஎஸ்  அணியின்  கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு மூன்று தினங்களாக காமெடியாக ,
கைதட்டல், விசில் என போகின்றது எனவும்,
சிங்க கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள் என கூறினார். கூட்டணி முடிந்துவிட்டது என்று 
கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூறி விட்டார் என தெரிவித்தார்.

ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிகாரர்களை அமைதியாக இருக்கும்படி  எடப்பாடி பழனிச்சாமியும் கூறிவிட்டார் என தெரிவித்தார்.
ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஓளிந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என கூறிய அவர்,
இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார் என கூறினார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர்  தங்களது நிலைப்பாடுகளை மாற்றக்கொள்ள கூடாது எனவும் எடப்பாடி பழனிச்சாமி எல்லாரையும் வாயை மூட சொல்லி விட்டார் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அமைதியாக இருக்க சொல்லி எந்த அறிக்கையும் வரவில்லையே என கேள்வி எழுப்பியதற்கு, தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் போனது என்று பதில் அளித்தார். மேலும் 
பாஜக வுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடுத்த வேண்டும் எனவும் , இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி உறுதிபடுத்தினால் எடப்பாடி சிறைக்கு செல்வார் எனவும் கோடநாடு கொலை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிச்சாமி மீது இதுவரை தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

எஸ்.பி. வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமியை விட வேலுமணி புத்திசாலி எனவும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றது எனவும், ஆனால் அவற்றின் மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe