தேசிய ஊட்டச்சத்து மாத விழா- கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு…

published 1 year ago

தேசிய ஊட்டச்சத்து மாத விழா- கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு…

கோவை: தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

 

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மாதத்தின் துவக்கத்திலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கன்வாடி ஊழியர்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் வட்டாரம் மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் சார்பில் ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி  நிகழ்ச்சி நடத்தினர்.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை  குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe