வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி- முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு…

published 1 year ago

வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சி- முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு…

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு "எனக்குள் ஒரு தலைவன்" என்ற பொருண்மையில் கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழின் பண்பாடு கலைச் சிறப்புகள் தமிழரின் தொன்மை தமிழரின் வணிகம் மாணவர்களின் எதிர்கால திட்டமிடல் போன்ற பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் சிறுதானிய உணவு கண்காட்சிகளை பார்வையிட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் வங்கி நிறுவனங்கள் பங்கேற்று தொழில் கடன், தொழில் முனைவோர் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe