அவினாசி மேம்பால பணிகள் எப்போது நிறைவடையும்? : சட்டமன்ற பேரவை மனுக்களின் குழு தகவல்

published 2 years ago

அவினாசி மேம்பால பணிகள் எப்போது நிறைவடையும்? : சட்டமன்ற பேரவை மனுக்களின் குழு தகவல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை:  தமிழக சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவர், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், மற்றும் உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில் குமார், பிரபாகரராஜா, மதியழகன் மாங்குடி ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் கோவை அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப்பணி பார்வையிட்டனர். பின்னர் டைட்டில் பார்க் அருகில் பி.டி. சாலை அமைக்கும் பணிகள்,  சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் ரோப் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து வெள்ளலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள்,  63-வது வார்டு ராமலிங்க ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இக்குழு கோவை வருதையொட்டி கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு தமிழக சட்டமன்ற பேரவை, சென்னை 600009 என்ற முகவரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

அதே போல் தனிநபர் குறை, நீதிமன்ற வழக்கு, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற மனுக்கள் இருக்கக்கூடாது எனவும் அறிவுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு  ஆய்வுக்கு எடுத்து கொண்டது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவானது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழக சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோவி. செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு சார்பில் இன்றைய தினம் கோவை மாவட்டத்திலும், நாளைய தினம் நீலகிரி மாவட்டத்திலும்  மனுக்கள் மீதான விசாரணையை கள ஆய்வு செய்யப்படும்.  மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நேரடி கள ஆய்வு செய்து விரைவாக  நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம்.
இந்த நிகழ்வில் எங்களுடன் சட்டப்பேரவை செயலர் பங்கெடுத்துள்ளார். அவினாசி மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு முடியும் தருவாயில் விரைவாக நடந்து கொண்டு வருகிறது.  இந்த பால பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முதல்வர், பொருப்பு அமைச்சர் ஆகியோ துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். நாங்கள் ஆய்வு செய்துள்ள இந்த இடங்களில் 5 இடங்கள் மனுதாரர் கோரிக்கை வைத்த இடங்களும், ஒரு இடம் நாங்கள் பொதுமக்கள் நலன் கருதி  ஆய்வு செய்துள்ளோம். உரிய அதிகாரிகளிடம்  விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். பணி தொடர்ந்து நடைபெறும். 122 மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe