காவிரி விவகாரம் : கோவையில் இருந்து பெங்களூர் மைசூருக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை

published 1 year ago

காவிரி விவகாரம் : கோவையில் இருந்து பெங்களூர் மைசூருக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை

கோவை:காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பாஜக, மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பெங்களூர் மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களில் அதிகாலை நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மற்ற பஸ்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe