கோவையில் மாணவியிடம் அத்துமீறிய ஜிம் மாஸ்டர் கைது

published 1 year ago

கோவையில் மாணவியிடம் அத்துமீறிய ஜிம் மாஸ்டர் கைது

கோவை: கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி வழக்கம்போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.

கல்லூரி  முடிந்ததும் தனது தோழி ஒருவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஹோப்ஸ் கல்லூரி அருகே சென்ற போது அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர் மாணவியை பின்தொடர்ந்து சென்றார். யாரும் இல்லாத இடத்தில் மாணவியை வழிமறித்த அந்த வாலிபர் தான் ஜிம் பயிற்சியாளராக இருப்பதாகவும் உங்கள் உடம்பை கட்டுமஸ்தாக மாற்றி காட்டுகிறேன் எனக் கூறினார்.

முன்பின் தெரியாத ஒருவர் தன்னிடம் இவ்வாறு  பேசுவதை அறிந்த மாணவி அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து மாணவி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவரும் தற்போது மசக்காளிபாளையத்தில் வசித்து வரும் ஜிம் பயிற்சியாளர் என்பது தெரியவந்தது போலீசார்.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe