கோவையில் எத்தனை நிறுவனங்கள் Hygiene Rating தரச்சான்று பெற்றுள்ளது தெரியுமா- மாவட்ட ஆட்சியர் கூறிய தகவல்...

published 1 year ago

கோவையில் எத்தனை நிறுவனங்கள் Hygiene Rating தரச்சான்று பெற்றுள்ளது தெரியுமா- மாவட்ட ஆட்சியர் கூறிய தகவல்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகை கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு (District Level Advisory Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உதவி ஆணையர்(நகர்ப்புற நிலவரித் திட்டம்) இளவரசி, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும், பேக்கரி சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவு தொழில் புரியும் உணவு வாணிகர்கள் தங்களின் வணிகத்தின் தன்மைக்கேற்ப உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்று/ உரிமம் பெறுதல் கட்டாயம் ஆகும். தேசிய அளவில் நடத்தப்படும் Far Righa Challenge Phase [1] க்கு நமது மாவட்டத்திற்கு பதிவு /உரிம வகையில் நிர்ணயக்கப்பட்ட இலக்கின் டிசம்பர் 2023 க்குள் இன்னும் சுமார் 6100 பதிவு சான்று / உரிமம் பெறப்பட வேண்டும். உணவு, பாதுகாப்பு உரிமம்/ பதிவுச்சான்று இல்லாமல் உனாவு வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு மற்றும் தாங்கள் சட்டத்தின் கீழ் மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5 இலட்சம் வரை அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே உரிமம்/பதிவு சான்று பெறாமல் அல்லது உரிமம்/பதிவுச்சான்று பெற்று புதுப்பிக்காமல் வணிகம் செய்யும் வரிக நிறுவனங்கள் உடனடியாக உரிமம்/பதிவுச்சான்றினை பெற அனைத்து உணவு வனரிக சங்கங்களுக்கும், உணவு வணிகம் தொடர்புடைய அரசு துறைகள் பெறவேண்டும்.

 உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அறிவிப்பு ( Notice) வழங்க உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டார். உணவு பாதுகாப்பு துறையின் உரிமம்/பதிவுசான்று பெற /புதுப்பிக்க உணவு பாதுகாப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://fosces.fssai.gov.in வ் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நிரந்தர விற்பனைக்கடைகள்/ஸ்டால்கள்/வண்டிகள் போன்றவற்றின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சந்தை அவசியம் ஆகும். இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுந்தராபுரம், வடவள்ளி, மேட்டுபாளையம், சிங்காநல்லூர் உழவர்சந்தைகள் Clean Vegetable and Fresh Fruit
Market தரச்சான்று பெறப்பட்டுள்ளது.

மேலும் R.S.புரம், பொள்ளாச்சி, குலூர், குறிச்சி உழவர்சந்தைகள் Clean Vegetable and Fresh Fruit Market சான்று பெற கூடுதல் இயக்குநர் வேளாண்மை வணிகம் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரியம் பெற்றுள்ள அனைத்து உனாவு வனிகர்களும் தங்களது வணிகத்தின் வகைக்கு ஏற்ப உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறதல் கட்டாயம் ஆகும். அரசு துறையில் நமது மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களது சான்றிதழ் காலாவதி அடைந்ததை தொடர்ந்து அவர்களுக்கும், புதிதாக பணியில் சேர்ந்துள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கும் FoST:C பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் சமையலர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பாக FoSTaC பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எனவே உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் விடுபடாமல் FoSTaC பயிற்சி பெற்று சான்றிதழ் பெறப்பட வேண்டும் மேலும் உணவு வணிக சங்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உணவு வணிகம் புரியும் அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயம் உணவு பாதுகாப்பு குறித்த FoSTaC பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜூலை 2022 க்கு பிறகு FoSTaC
பயிற்சி பெற்று, பெறப்படும் சான்றிதழ்களின் காலாவதி வாழ்நாள் முழுவதும் ஆகும். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து ஸ்டார் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால்கள், அங்கள்வாடி மையங்கள் மற்றும் இறைச்சி கடைகள் பாதுகாப்பான முறையில் உளவு வழங்குவது குறித்து தர நிர்ணயம் செய்ய (Hygiene Rating) Certificate பெறுவதற்கு FSSAI வழிமுறை வகுத்துள்ளது. 

அதன்படி மாவட்டத்தில் இதுவரை 624 நிறுவனங்கள் மட்டும் Hygiene Rating தரச்சான்று பெறப்பட்டுள்ளது. எனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடைகளுக்கு Hygiene Rating தரச்சான்று பெற வேண்டும்.

பொதுமக்கள் தரக்குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எனர்னொய், அளவுக்கு அதிகமான செயற்கை வர்ணம் கலந்த உணவுகள், மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்/ பிளாஸ்டிக் சம்பந்தமான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் புகார் எண் மற்றும் IN Food safety Consumcr App என்ற செயவிலும் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe