குணியமுத்தூர் பகுதியில் தோண்டப்பட்ட குழியில் பள்ளி குழந்தைகளோடு சிக்கிய பள்ளி பேருந்து- மாநகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி...

published 1 year ago

குணியமுத்தூர் பகுதியில் தோண்டப்பட்ட குழியில் பள்ளி குழந்தைகளோடு சிக்கிய பள்ளி பேருந்து- மாநகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி...

கோவை: குணியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு சரியாக மூடாத குழியில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள் மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் சாலையின் நடுவே தோண்டப்படும் குழிகள் சரி வர மூடாமல் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட  87 வது வார்டு குணியமுத்தூர் பாரதி நகர் பிரதான சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடாத காரணத்தால்,சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து குழியில் சிக்கியது. இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டகப்பட்ட பொதுமக்கள் மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே பலமுறை புகார் அளித்தும்  தோண்டப்பட்ட ,குழிகள் சரியாக மூடமாலும், சரி வர பணிகள் செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe